ரேடியோ ஜாக்கிக்கு மிரட்டல்

காஷ்மீரின் சோபோர், பாரமுல்லா, வடக்கு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்திற்கும் காஷ்மீர் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு பாரத ராணுவம் தனது முதல் சமூக வானொலி நிலையமான ‘ரேடியோ சினார்’ ஆரம்பித்தது. இதில், ரேடியோ ஜாக்கியாக பாரமுல்லா பகுதியை சேர்ந்த  சமணியா பட் என்ற இளம்பெண் தேர்வாகி வேலையைத் தொடங்கினார். அவர் ஸ்டுடியோவில் வேலை செய்யும் படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனையடுத்து அவர் தலையில் முஸ்லிம் பெண்களை போல முக்காடு அணிய வேண்டும், முஸ்லிம் பெண்களின் உடையை அணிய வேண்டும் என அவருக்கு அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் மிரட்டல் விடுக்கத் துவங்கியுள்ளனர்.