பொதுச் சாலை முடக்கம் கூடாது

தில்லியில் விவசாய போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி விவசாய ஏஜெண்டுகள் செய்து வரும் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில், வழக்கமாக நொய்டாவில் இருந்து டில்லி செல்ல 20 நிமிடங்கள்தான் ஆகும், தற்போது இந்த போராட்டத்தாலும் ஆக்கிரமிப்புகளாலும் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, டில்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் ஆராய்ந்து, உத்தர பிரதேசம், ஹரியானாவை இந்த வழக்கில் சேர்க்க கூறியது. பின்னர், முன்பு, முஸ்லிம்கள், சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து ஷாஹின்பாக் பகுதியில் நீண்டகால போராட்டம் நடத்திய வழக்கையும், அவ்வழக்கில் பொதுசாலைகளை முடக்கக்கூடாது என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி  இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 19க்கு ஒத்திவைத்தது.