நேரடி வரி வசூல் அதிகரிப்பு

நேரடி வரி விதிப்பின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் மத்திய அரசு சுமார் ரூ. 9.45 லட்சம் கோடி நிதியை வசூல் செய்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி வசூல் அளவு 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் நேரடி வரி வசூல் அளவீட்டை மத்திய நிதியமைச்சகம் மறுமதிப்பீடு செய்து இலக்கு நிர்ணயம் செய்த நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட 9.05 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி 9.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூல் செய்துள்ளது. வசூல் செய்யப்பட்ட மொத்த 9.45 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியில், கார்பரேட் வரியாக ரூ. 4.57 லட்சம் கோடியும், தனிநபர் வருமான வரி மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற வரிப் பிரிவில் ரூ. 4.88 லட்சம் கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் மத்திய நிதியமைச்சகம் மொத்தம் 12.06 லட்சம் கோடி ரூபாய் அளவில் வசூல் செய்திருந்த நிலையில், சுமார் 2.61 லட்சம் கோடி ரூபாய் ரிட்டன் தொகையாக திருப்பியளித்துள்ளது. இதேபோல் 2020ல் மோசமான வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலையிலும் முன்கூட்டிய வரி சுமார் 4.95 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டை விடவும் 6.7 சதவீதம் அதிகம்.