பொது கொள்முதல் விதி தளர்வு

கொரோனா தொற்றுக்கு எதிராக நமது நாடு பெரும்ய போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைத் தொடர்பான பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய ஏதுவாக, பொது கொள்முதல் உத்தரவு 2017ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு செப்டம்பர் 30 வரை இருக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களின் வருமானத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் கடந்த ஜூன் 15 2017ல், பொது கொள்முதல் விதியை மத்திய அரசு அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.