வாக்குறுதி நிறைவேற்றம்

தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய ஏழு உட்பிரிவுகளில் இருக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வந்தபோது வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது, இந்த ஏழு ஜாதி பிரிவுகளையும் ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அழைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இம்மசோதா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன், விரைவில் சட்டமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.