பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

கிராமப்புறங்களில் ‘அனைவருக்கும் வீடு’ என்ற நோக்கத்தை அடைய அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான வீடுகளை கட்ட மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற இந்த பிரதம மந்திரி கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தை மார்ச் 2024வரை தொடர்வதற்கு கிராமப்புற மேம்பாட்டுத் துறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மீதமுள்ள 155.75 லட்சம் வீடுகளின் கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் சுமார் 2.95 கோடி வீடுகள் கட்டுவது மத்திய அரசின் இலக்கு.