மதமாற்றம் தடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகில் உள்ள பட்டியல் இன மக்கள் அதிகம் வாழும் நடுவக்குறிச்சி கிராமத்தில் மதமாற்றம் செய்ய, கடந்த பல நாட்களாக பக்கத்து ஊரான பாளையம் செட்டிகுளம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துவ அமைப்பினர், தினமும் நடுவக்குறிச்சி ஊருக்கு வந்து குழந்தைகளை வேனில் ஏற்றிச்சென்று மூலைச்சலவை செய்து, மதியம் ஊருக்குள் திரும்ப கொண்டு வந்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த மதமாற்றச் சூழ்ச்சியில் சில பெரியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த நெல்லை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அந்த கிராமத்துக்குச் சென்று ‘கிஞ்சித்காரம் தர்ம சம்ஸ்தாபனம்’ அமைப்பின் துணையுடன் அந்த குழந்தைகளை அமர வைத்து, ஹிந்து மதத்தின் பெருமைகள், இதிகாசங்கள், வாழ்வியல் முறைகளை குழந்தைகளுக்கு எளிதில் புரிந்துக்கொள்ளும்படியாக சொல்லிக் கொடுத்தனர். இனி இது போன்ற எந்த மதமாற்றம் குழுக்கள் வந்தாலும் போகக்கூடாது என்றும் எடுத்துரைத்தனர். மேலும், குழந்தைகளை இப்படி ஏமாற்றி, ஆசை காட்டி மதமாற்றம் செய்யும் அமைப்பினர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.