பி.எப்.ஐ பயங்கரவாதி கைது

பயங்கரவாத ஆதரவு அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ (பி.எப்.ஐ)வின் பயிற்சித் தளபதியான முகமது ரஷீத்தை, உத்தரபிரதேச அரசின் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த காவல்துறையினர் (எஸ்.டி.எப்), பஸ்தி ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். லக்னோ வழியாக மும்பைக்கு தப்பிச்செல்ல முயன்ற அவனிடமிருந்து, பல தேச விரோத ஆவணங்கள், சந்தேகத்திற்கிடமான ஒரு சிடி, போலி ஆதார் அட்டை மற்றும் ஒரு அலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றினர். அவன் மீது பஸ்தியில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை துவங்கியுள்ளது. விசாரணையில் தனது முக்கிய நோக்கம் ‘முஸ்லீம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, ஆயுதப் பயிற்சி அளித்து அவர்களை தாக்குதலுக்குத் தயார் செய்வதுதான் என ரஷீத் ஒப்புக்கொண்டான். என காவல்துறை தெரிவித்துள்ளது.