ஒரு தேசம் ஒரு தேர்தல்

தேச பாதுகாப்பு, முன்னேற்றம், விரைவான செயல்பாடுகள், ஸ்திரத்தன்மை போன்ற பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற யோசனையை முன்வைத்தது. தேச அளவில் விவாதிக்கப்படும் இந்த விஷயத்திற்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அதற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதன் அறிக்கையில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான ஒரு பொதுவான தேர்தலை இக்குழு பரிந்துரைத்துள்ளது. “ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது, அரசின் செலவுகள், கட்சிகளின் செலவு மீதான சுமையை குறைக்கும் மற்றும் மனித வளங்கள் உகந்ததாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளது.