குரானில் 26 வசனங்களை நீக்க மனு

பயங்கரவாதத்தையும் ஜிஹாத்தையும் ஊக்குவிக்கும் வகையில், குர்ஆனில் உள்ள 26  வசனங்களை நீக்க உத்தரவிடுமாறு உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஷியா மத்திய வக்பு வாரியத் தலைவர் சையத் வசீம் ரிஸ்வி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத்தை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் உள்ளன. இந்த வசனங்கள் குர்ஆனில், முதல் மூன்று கலீபாக்களால், போரில் இஸ்லாத்தை விரிவுபடுத்த சேர்க்கப்பட்டன. பயங்கரவாதிகள் இந்த வசனங்களை ஜிஹாத்துக்கு எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். இந்த வசனங்கள் இளம் முஸ்லீம் தலைமுறையை தவறாக வழிநடத்த பயன்படுகின்றன. இதன் விளைவாக லட்சக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.