சீன நிறுவனக்களுக்கு தடையா?

பாரதத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஜூன் 15க்குப் பிறகு அரசால் அங்கீகரிக்கப்பட்ட, நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகள் சீனாவின் ‘ஹூவாவே’ நிறுவனத்தையும் ‘இசட்.டி.இ கார்ப்பரேஷன்’ நிறுவனத்தையும் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேகிக்கின்றன.

சில நாடுகள் இந்த நிறுவனங்களைத் தடையும் செய்துள்ளன. சமீபத்திய பாரத – சீன எல்லை பிரச்னைகளுக்குப் பிறகு, சீன நிறுவனங்களை, பாரதமும் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது. எனவே, இந்த இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறுவது சந்தேகமே. ஒருவேளை இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், குறைந்த விலை என்பதால் இவற்றை வாங்கி பயன்படுத்தும் பார்தி ஏர்டெல், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் தங்களின் தொலைத்தொடர்பு சாதனங்களை மாற்றவேண்டிய சூழல் ஏற்படும். அதனால் அவற்றின் செலவினம் அதிகரிக்கும் என கூறப்பபடுகிறது.