மதமாற்றத்தை தடுக்க மனு தாக்கல்

‘நம் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது மதச்சார்பின்மை. ஆனால், பொருள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுவது, மிரட்டி மதம் மாற்றுவது போன்ற செயல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இவை, அரசியல் சட்டத்தின், 14, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. எனவே, இதுபோன்ற கட்டாய மற்றும் ஆசைக்காட்டி மதமாற்றத்தில் ஈடுபடுவோர், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பரப்புவோருக்கு, மூன்று முதல் பத்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையுட்ன் அபராதம் விதிக்கவும் வகை செய்யும் சட்டம் இயற்றும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம், சரியாக அமல் படுத்தப்படுவதில்லை. இதனாலும், கட்டாய மத மாற்றங்களினாலும் ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஹிந்துக்கள் சிறுபான்மையாகி விட்டனர். அதனால், மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை, பாகுபாடின்றி முழுமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என பா.ஜ.க தலைவரும், வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய, உச்ச நீதிமின்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.