ஓட்டுனர் நடத்துனருக்கு அபராதம்

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக பேருந்துகளில் இருக்கையில் மட்டுமே பயணியரை ஏற்றிச்செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் போதிய பேருந்துகள் இல்லாததால் கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து பயணியர் ஏறி விடுகின்றனர். இதை நடத்துனர்களாலோ ஓட்டுனராலோ தடுக்க முடியவில்லை. சுகாதாரத் துறையின் சார்பில் வாகன சோதனை செய்யப்பட்டு பயணியர் நின்று பயணித்தால், ஓட்டுனர் நடத்துனருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக இதற்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும்.