பாகிஸ்தான் 11ல் 10ம் மோசம்

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில், நாடுகளின் செயல்பாடுகள் குறித்து, இந்த அமைப்பு பட்டியலிடுகிறது.இதன் அடிப்படையில் தான், அந்த நாடுகளுக்கு சர்வதேச அமைப்புகளின நிதி உதவி கிடைக்கும். நம் அண்டை நாடான பாகிஸ்தான், ‘கிரே’ எனப்படும், நடவடிக்கைகள் எடுப்பதில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் உள்ளது. இதனால், சர்வதேச நிதி கிடைப்பது பாகிஸ்தானுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற, பாகிஸ்தானுக்கு, 2018ல், 40 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. பிரான்சின் பாரிஸ் நகரில் வரும் அக்டோபர் 18 முதல் 22 வரை எப்.ஏ.டி.எப்., கூட்டம் நடக்க உள்ளது. இதில், கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எப்.ஏ.டி.எப்.,பின் துணை அமைப்பான, ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஆசியா, பசிபிக் குழு, புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத நிதியை எதிர்த்துப் போராடுவது போன்ற சர்வதேச இலக்குகளில், 11ல், 10ல் பாகிஸ்தானின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, எப்.ஏ.டி.எப் எடுக்க உள்ள முடிவைக் கட்டுப்படுத்தாது என்றாலும் முக்கிய கவனம் பெறும். கடந்த மாதம், பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்து எப்.ஏ.டி.எப்பின் 40 பரிந்துரைகளில் 38 இல் பாகிஸ்தானை பெரும்பாலும் இணக்கமானது என்று ஆசிய பசிபிக் குழுமம் விவரித்தது. மீதமுள்ள இரண்டு பரிந்துரைகளில் முன்னேற்றம் அடையும் வரை அது பாகிஸ்தானை கண்காணிக்கும். எப்.ஏ.டி.எப் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேறுவது பாகிஸ்தானின் இமேஜை சற்றே மீட்டெடுக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்க உதவும் என கருதப்படுகிறது.