ஹிந்துக்களிடம் பணிந்த பாகிஸ்தான் எம்.பி

பாகிஸ்தானின் ஆளும் தெரிக்-இ-இன்சாஃப் கட்சியின் எம்.பியான அமீர் லியாகத் உசேன், சில நாட்களுக்கு முன்பு ஹிந்து கடவுளின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப்புடன் ஒப்பிட்டு கேலி செய்திருந்தார். இதை பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர். சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அமீர் லியாகத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அமீர் லியாகத் மன்னிப்பு கோரினார். தனது ட்விட்டர் இடுகையையும் அகற்றினார். அமிர் லியாகத், “ஹிந்துக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் அறிவேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா மதநம்பிக்கைகளையும் நான் மதிக்கிறேன். அதைத்தான் எனது மதம் எனக்குக் கற்றுக் கொடுத்தது” என தெரிவித்துள்ளார்.