மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலை

பிரதமரின் குடிமக்களுக்கான உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியமான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், தொலைதூர இடங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மருத்துவமனைகள் தங்கள் சொந்த ஆக்ஸிஜன் ஆலையைக் கொண்டிருக்கும். அவை தங்களுக்கான ஆக்ஸிஜனை தாங்களே உற்பத்தி செய்யும் முழு திறன் பெற்றிருக்கும். இதற்காக, பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பி.எஸ்.ஏ) ஆலைகள் மருத்துவமனைகளில் நிறுவப்படும். இந்த மருத்துவமனைகளை அடையாளம் காண இரண்டு குழுக்களை மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.