ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவு

‘சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன. அந்த கோயிலுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. அந்த நிலம், வருவாய் துறை அதிகாரிகளின் ஆதரவுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த கோயிலையும், அதன் சொத்துக்களையும் மீட்க வேண்டும்’ என சேலத்தை சேர்ந்த, ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இது குறிந்த வழக்கு விசாரனையில், பதில் அளித்துள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை, ‘கோயிலுக்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளது. அதன் பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்பட்ட உள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கோயில் நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள், கோயில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்கள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய என ஹிந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், கோயில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கைகளை விரைந்து எடுக்க பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.