வீட்டிலிருந்தே அலுவலக வேலை

உலகின் பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்துறை முன்னேற்றம் தேக்கமடைந்து உள்ளது என்கின்ற கருத்து நிலவிவரும் அதேநேரம், வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது பலரும் அலுவலக வேலையுடன் சேர்த்து வீட்டு வேலைகளையும் செய்து வருகின்றனர்.

அலுவலகப் பணியுடன் பலர் தங்கள் குழந்தைகளின் வீட்டு பாடங்கள் உள்ளிட்ட பணிகளையும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை உட்பட பல துறைகளில் பணிபுரிவோர் பலரும் அலுவலகத்தில் வேலை செய்வதை விட, வீட்டில் இருந்தபடி வேலை செய்வதை (Work from Home) விரும்புகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்.

தெரியாத விஷயம் “உலகளாவிய பல நிறுவனங்கள், அடுத்தகட்ட முயற்சியாக உலகின் எந்த நாடுகளில் ஊழியர்கள் இருந்தாலும் அந்த இடத்திலேயே அவர்கள் இருக்கட்டும். ஆன்லைனில் அவர்கள் வேலை செய்யட்டும் என்கின்றன. உலக அளவில் இசைத் துறையில் ஸ்ட்ரீமிங் முறையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் – ஸ்பாட்டிபை, இந்நிறுவன இணைய தளத்தின் மூலம் பாட்டுக்களை பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாகக் கேட்கலாம். இந்நிறுவனம் தங்களது ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் அந்தந்த நாட்டிலேயே இருந்துகொண்டு தங்களுக்கு உழைக்கும் முறையை கொண்டுவர விரும்புகிறது. சட்ட பிரச்சினைகள், வேலை செய்யும் நாட்டின் நேர வித்தியாசம் இவை குறுக்கிடாத வகையில் இருந்தால் இந்நிறுவனம் இத்தகைய முயற்சிக்கு பச்சைக் கொடி காட்டப் போகிறது. இத்தகைய அணுகுமுறை பணி என்பது அவரவர் செய்வதில் தான் இருக்கிறதே தவிர, எங்கிருந்து செய்தார்கள் என்கின்ற கோரிக்கை அல்ல என்றே நிறுவனம் தமது பிளாகில்(blog) போட்டு விட்டது.

ஐ.பி.எம் (IBM) போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பெண்கள் பலரும் பணி செய்ய விரும்புவதன் நோக்கம் என்ன தெரியுமா? வீட்டிலிருந்தே பணி செய்ய இந்நிறுவனத்தின் பல துறைகள் அனுமதியளிக்கின்றன.இத்தகைய சவுகரியத்தினால், கொரோனா காலத்திற்கு முன்பே அதவாது சுமார் எட்டு ஆண்டுகளாகவே இத்தகைய வீட்டிலிருந்தே பணி செய்யும் அணுகுமுறையை இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. பல வங்கி சார்ந்த நிறுவனங்களின் வீட்டிலிருந்தே பணி செய்யும் முறையைப் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஊழியர்களை பொறுத்தவரை வீட்டிலி ருந்தே பணி செய்யும் முறையால் வாகனங்களில் சென்று திரும்பிவரும் நேரம்காலம் மிச்சம், போக்குவரத்தின் மூலம் ஏற்படும்உளவியல் ரீதியாக உள்ள தொந்தரவுகள் மிச்சம். நிர்வாகங்களுக்கு கிடைப்பதோ பல முறை லாபம்: ஊழியர்க ளுக்கு வாகன வசதி செலவு, அலுவ லக வாடகை மிச்சம், சிற்றுண்டி ஏற்பாடு மிச்சம், அலுவலக உள்கட்டமைப்பு செலவு மிச்சம், இவற்றின் தொடர்பான பணியாளர்கள் நியமிப்பதும் மிச்சம்.