மாபியாக்களுக்கு இடமில்லை

உத்தரபிரதேசம், காஸிப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்தியநாத், ‘வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும், மாபியா கலாச்சாரத்தினை ஒழிக்க எனது அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. முந்தைய அரசு, கிரிமினல்களையும், மாபியா கலாசாரத்தையும் வளர்த்ததினால்  மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. புதிய உத்தரபிரதேசத்தில், மாபியாக்கள், கிரிமினல்கள், சமூக விரோத சக்திகளுக்கு இடமில்லை. வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் அக்கறை காட்டி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.