வெடிகுண்டு வழக்கில் புதிய திருப்பம்

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியில் வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகள் கொண்ட ஸ்கார்பியோ காரும் அதற்கு துணையாக வந்த இன்னோவா காரும் திருடப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. அவை இரண்டும் கைது செய்யப்பட்ட காவல் அதிகாரி சச்சின் வாஸால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவை திருடுபோனதாக புகார் கொடுக்க, அதன் உரிமையாளரை சச்சின் வாஸ் நிர்பந்தித்திருக்கிறார். காவல்துறை தன்னை துன்புறுத்தியதாக காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென் கடிதம் எழுதியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு கார்களுக்கும் போலி நம்பர் பிளேட்டை சச்சின் வாஸ் அருகில் உள்ள ஒரு ஸ்டிக்கர் கடையில் தயாரித்திருக்கிறார். அவற்றை ஓட்டிவந்த இரண்டு ஓட்டுனர்களும்கூட காவல்துறையில் ஓட்டுனர்களாக பணிபுரிபவர்கள். இன்னோவா கார் சமீபத்தில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஓட்டுனர்களும் விரைவில் விசாரிக்கப்படுவார்கள் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.