திருப்பதி முன்பதிவில் புது வசதி

சமீபத்தில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி, நிகழ்ச்சி நிறைவுக்கு பின், ‘கிராம மக்களிடையே ஹிந்து தர்மத்தை போதிக்க, தேவஸ்தானம் புதிய நடவடிக்கைககள் மேற்கொள்ள உள்ளது. அதற்காக பஜனை மண்டலிகள், கோசாலை, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யும் மண்டலிகள், ஸ்ரீவாரி சேவார்த்திகள் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றார். மேலும், இணையதளத்தில் திருமலையில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வசதிக்காக, இனி அலிபிரி சோதனைச் சாவடியை கடந்ததும், அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய துணை விசாரணை அலுவலக எண்கள், அவர்களது அலைபேசிக்கு  குறுந்தகவல் வாயிலாக அனுப்பப்படும். பக்தர்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று தங்கள் அறையை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை 10 நாட்களில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.