நேதாஜிக்கு உயரமான சிலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாரத சுதந்திர போராட்டத்திற்காக தன் இந்திய தேசிய ராணுவத்துடன் (ஐ.என்.ஏ) முதன் முதலில் கால் பதித்த இடம் மணிப்பூர். இங்கு அவர் முதலில் ஐ.என்.ஏ கொடியை ஏற்றி வைத்த இடம், வெடிகுண்டு வீசப்பட்ட வீடு போன்றவை இன்னும் உள்ளன. அதனை அம்மாநில அரசு கையகப்படுத்தி நினைவகமாக்கி உள்ளது. அவ்விட்த்தில் நேதாஜியின் மிகப்பெரிய சிலையை நிறுவ வேண்டும். அங்கு வடகிழக்கின் மிக உயரமான கொடிக்கம்பத்தை நிறுவி அதில் பாரதக்கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில முதல்வர் என். பைரன் சிங் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியும் நேதாஜியின் சிலை நிறுவுவது குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளார் என அவர் தெரிவித்தார்.