நரேந்திர மோடி ஸ்டேடியம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான “நரேந்திர மோடி ஸ்டேடியத்தை” குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். குஜராத், அகமதாபாத்தில், மோட்டேராவில் உள்ள சர்தார் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவின் பூமிபூஜையையும் துவங்கிவைத்தார். இந்த ஸ்டேடியம் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும். 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, மேலும் 40 விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடம், உள்ளமைந்த கிரிக்கெட் அகாடமி, நான்கு அணிகளுக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரிய டிரஸ்ஸிங் அறைகள், அதிநவீன உடற்பயிற்சி கூடம், ஆறு உட்புற பயிற்சி பிட்ச்கள், மூன்று வெளிப்புற பயிற்சி திடல்கள், ஜிம்னாஸ்டிக் கூடம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.