பாடப்புத்தகத்தில் இருந்து பெரியார் நீக்கம்

கல்வித் துறையில் ஊடுருவியிருக்கும் திராவிட நாத்திகவாதிகள், பள்ளிகளில் கடவுள் மறுப்புக் கொள்கையை திட்டமிட்டே திணித்துள்ளனர். அவ்வகையில், மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஈ.வெ.ராமசாமியைப் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் தமிழ் புத்தாண்டு, சித்திரை 1, அல்ல. தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்றும் தி.மு.க கருணாநிதியின் கருத்துக்களைப் புகுத்தும் கையேட்டை பள்ளிகளில் விநியோகித்ததாக கூறப்படுகிறது.  இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மலேசிய ஹிந்து சங்கம் அந்நாட்டின் கல்வித்துறைக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின், கல்வித்துறை இணை அமைச்சருடன் நடந்த கூட்டத்திற்கு பின் பெரியார் குறித்த பகுதிகள் நீக்கப்படும் என்று மலேசிய அரசு உறுதி அளித்தது. பாரத தமிழ் தலைவர்களுக்கு பதிலாக மலேசியாவில் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களைப் பற்றி பாடப்புத்தகத்தில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளது மலேசிய ஹிந்து சங்கம்.