முறையற்ற முதல்வரின் அறிவிப்பு

குடியரசு தினத்தன்று வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீது, டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு விரைவான சட்ட உதவியை செய்ய, 70 வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவை பணியமர்த்தியுள்ளதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காணாமல்போன சில விவசாயிகள் பிரச்சினையை உள்துறை அமைச்சகத்துடன் தனிப்பட்ட முறையில் எடுத்துச்சென்று அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவதை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும் அமரீந்தர் சிங் கூறினார். இவர்கள் அனைவரும் தேசியக்கொடியை அவமதித்தவர்கள். காவலர்களை கருணையின்றி தாக்கியவர்கள். போராட்டம் எனும் பெயரில் வன்முறையை கையில் எடுத்தவர்கள். முக்கியமாக இவர்கள் விவசாயிகளே இல்லை, வியாபாரிகளும் அவர்களது கைகூலிகளும்தான். இவர்கள் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. இதை குறித்து தெரிந்தும், வரி செலுத்துவோரின் செலவில் வன்முறையாளர்களுக்கு முதல்வர் உதவுகிறார். ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியான முதல்வரே, இப்படி சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.