மசூதியாக்கப்பட்ட சரஸ்வதி கோயில்

பாரத நாகரிகத்தின் வளமான கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் மற்றும் ஆங்கிலேய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. முகலாயர்களின் கைகளில் எதிர்கொள்ளப்பட்ட அட்டூழியங்களின் பழமையான உதாரணங்களில் ஒன்று ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ஆதாயி தின் கா ஜோன்ப்ரா.  இதன் பொருள் ‘இரண்டரை நாட்களுக்கான தங்குமிடம்’. இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது இந்த மசூதி. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், முஸ்லிம்கள் நமாஸுக்கு இந்த கட்டடத்தை இன்னும் பயன்படுத்துகின்றனர். இந்த இடம் 1153ல் கட்டப்பட்ட இந்த அற்புதமான சமஸ்கிருத கல்லூரி (சரஸ்வதி காந்தபரன் மஹாவித்யாலய்) சரஸ்வதி தேவி கோயிலுடன் அமைக்கப்பட்டு இருந்தது. மகாராஜா விக்ரஹராஜாவால் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. சில உள்ளூர் ஜெயின் புராணக்கதைகள், இந்த கட்டிடம் 660 களில் சேத் விராம்தேவ காலாவால் அமைக்கப்பட்ட ஒரு ஜெயின் ஆலயம் என கூறுகிறது. எது எப்படி இருப்பினும், இக்கட்டடத்தில் கொட்டிக்கிடக்கும் ஹிந்து மற்றும் ஜெயின் பாரம்பரிய கட்டடக்கலை நேர்த்தி ஆகியவை இது கண்டிப்பாக மசூதியல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. 1192ல், முகமது கோரி, மகாராஜா பிருத்விராஜ் சௌஹானை தோற்கடித்து அஜ்மீரைக் கைப்பற்றியபோது அழிக்கப்பட்ட பல அற்புதக் கோயில்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. 1871ல் தொல்லியல்துறையின் டைரக்டர் ஜெனரலான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், இந்த இடத்தை ஆய்வு செய்தபோது, ​​அது பல ஹிந்து கோவில்களின் இடிபாடுகளுடன் கட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல வரலாற்றாசிரியர் சீதா ராம் கோயல் தனது ‘ஹிந்து கோயில்கள்: அவர்களுக்கு என்ன நடந்தது’ என்ற புத்தகத்தில் இந்த மசூதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் சையத் அஹ்மத் கான் எழுதிய ‘அசார் உஸ் சனதித்’ என்ற புத்தகத்தில், இந்த மசூதி ஹிந்துக் கோயில்களின் பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.