ஸ்ரீதரனுக்கு மோகன்லால் பாராட்டு

கேரள சட்டமன்றத் தேர்தலில், பாலக்காடு பா.ஜ.க வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை குறித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்  வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், இது ஒரு சாத்தியமற்ற ஒன்று என்று உலகமே கூறிய நிலையில், ஸ்ரீதரன் கொங்கன் ரயில்வேயை செயல்படுத்திக் காட்டினார். புயலில் சேதமடைந்த பம்பன் பாலத்தை 46 நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பியது ஸ்ரீதரனின் மன உறுதி தான் என பாரட்டியதோடு, அவரின் சாதனைகளைப் பட்டியலிட்டு, எதிர்காலத்தில், கேரளாவை வழிநடத்த அவரது சேவைகள் மேலும் தேவை என்றும் புகழ்ந்துள்ளார்.