சன்ஸ்கார் பாரதியின் கலா சங்குல்

புது தில்லியில் உள்ள தீன்தயால் உபாத்யாய மார்கில் உள்ள சன்ஸ்கார் பாரதி வளாகத்தில் ‘கலா சங்குல்’ என்ற பெயரிலான கலை மற்றும் கலாச்சார மையத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கடந்த ஏப்ரல் 2ல் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘உலகில் பாரதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதில் கலைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. தனித்தன்மை மற்றும் கூட்டுத்தன்மைக்கு மாற்றாக வேறொன்றைத் உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் தற்காலிக விஷயங்களுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால், பாரதக் கலை மற்றும் கலாச்சாரம் நம்மை நித்திய மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது. நமக்குள்ளேயும் வெளியேயும் உள்ளவற்றை இணைக்கும் பாலமாக திகழ்கிறது. ‘கலா சங்குல்’, இந்த தேசிய கடமை உணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் வளர்ப்பதற்கான ஒரு கருவி. மிகவும் சிக்கலான விஷயங்களை, அறிவுசார் சொற்பொழிவுகளின் மூலம்கூட விளக்க சாத்தியப்படாததைகூட, இதில் உலக அளவில் பாரதத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குருகுல முறையை ஒழிக்க பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு முயன்றது, ஆனால் கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் அவற்றின் மதிப்புகள் அப்படியே காக்கப்படுகின்றன. பாரதத்தின் கலை வெறும் பொழுதுபோக்கு அல்ல. ஓம்காரம் அதன் ஆரம்பம்’ என பேசினார். இந்த நிகழ்சியில், சன்ஸ்கார் பாரதியின் புரவலர் பாபா யோகேந்திரா தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். பிரபல கலைஞர்களான வாசிபுதீன் தாகர், மாலினி பட்டாச்சார்யா, அனுப் ஜலோட்டா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். பிரபல கலைஞரும், சன்ஸ்கார் பாரதியின் தேசியத் தலைவருமான வாசுதேவ் காமத் அனைவரையும் வரவேற்றார்.