வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்

ஒடியா மொழியின் தந்தை எனும் பட்டத்தை பெற்ற அடிக்காபி சரளா தாஸின் 600-வது பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய குடியரசு‌ துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘சரளா தாஸ் ஒரு இலக்கிய பேராளுமை பெற்றவர். பிரத்தியேக அமைப்பு மற்றும் நடையின் காரணமாக சரளா தாசால் எழுதப்பட்ட மகாபாரதம் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகும் ஒடியா மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது’ என புகழ்ந்தார். மேலும், ‘குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகளவில் எழுத்தாளர்கள் எழுத வேண்டும். நிர்வாகம், நீதி, கல்வி ஆகிய துறைகளில் உள்ளூர் மொழியை அதிகமாக பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அடிப்படை கல்வியறிவை வலுப்படுத்துவதற்காக வாசிக்கும் பழக்கத்தை சிறுவயது முதலே குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு உபகரணங்களை அதிக அளவில் அவர்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் வாசிப்புப் பழக்கம் அவசியம்’ என்றும் பேசினார்.