மோகன் லாசரஸுக்கு ஐகோர்ட் குட்டு

ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதற்காக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம், அரியலுார் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில், புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், சில புகார்களில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லாசரஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த  நீதிபதி, ‘மத பிரசாரம் செய்பவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது, மதத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்தும் போது, பொறுப்புணர்வு தேவை, தன்னை அவர் திருந்திக் கொள்ள வேண்டும்.’ என, அறிவுறுத்தி வழக்கை ரத்து செய்தார்.