மோடி வெளியிடும் கீதை தொகுப்பு

ஸ்ரீமத் பகவத்கீதையின் விளக்கத்தை உரையை ஒருவர் எழுதி வெளியிடுவதே பொதுவான வழக்கம். தற்போது முதல் முயற்சியாக பாரதத்தை சேர்ந்த ஷங்கர் பாஷ்யா முதல் பாசனுவாடா வரையிலான 21 பிரபல அறிஞர்களின் எழுதிய விளக்கங்கள் கையெழுத்துப் பிரதிகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. 11 தொகுப்புகளாக வெளியாகும் இப்புத்தகத்தை இன்று மாலை ஐந்து மணிக்கு புது தில்லியின் ‘லோக் கல்யாண் மார்க்’கில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் ஸ்ரீ மனோஜ் சின்ஹா, டாக்டர் கரண் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.