மீசா – ஒரு தவறான முன்னுதாரணம்

கோயிலுக்குச் செல்லும் ஹிந்து பெண்களையும் அவர்களின் மத மரபுகளையும் கொச்சைப்படுத்தி அவமதித்த ‘மீசர்’ (மீசை) என்ற நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஹரீஷ் எழுதிய இந்த நாவல் மாத்ரூபூமி வார இதழில் வெளியானது. பல்வேறு ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அது நிறுத்தப்பட்டது. பின்னர் வழக்கம்போல, இடதுசாரி அமைப்பினர் இந்த நாவலுக்கு முட்டு கொடுத்தனர். நாவலை டி.சி புக்ஸ் புத்தக வடிவத்தில் வெளியிட்டார் ஹரீஷ். பாஜகவின் மூத்த தலைவரும், வெளிவிவகார அமைச்சருமான வி. முரளீதரன், இடதுசாரி அரசின் ஹிந்து எதிர்ப்பு அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கேரள பாஜக மூத்த தலைவர் ஷோபா சுரேந்திரன், ‘மீசர்வுக்கு விருது வழங்குவதற்கான முடிவு ஹிந்து சமுதாயத்திற்கும் பெண்கள் சமூகத்திற்கும் விடப்பட்ட வெளிப்படையான சவால் என்று கூறினார். இந்த ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைக்கு சி.பி.ஐ.எம் தக்க விளைவுகளை எதிர்கொள்ளும்’ என்று கூறினார்.