பொய் சொல்லும் குமாரசாமி:

அயோத்தியில் அமையவுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு தேசம் முழுவதும் மக்களிடம் இருந்து நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. இதனால் பாரதத்தில் எங்கே ஹிந்து எழுச்சி ஏற்பட்டு நம் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ   என அஞ்சுகின்றனர் பல அரசியல்வாதிகள். எனவே இதை குறைகூறி வருகின்றனர். அவ்வகையில், இந்த நன்கொடை இயக்கத்தை, சற்றும் கூச்சம் இல்லாமல் நாஜி பிரச்சாரத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் முன்னாள் கர்நாடக முதலமைச்சரான குமாரசாமி. ‘ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடைகளை சேகரிப்பவர்கள், பணம் செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களின் வீடுகளைத் தனித்தனியாகக் குறியிடுகிறார்கள்’ என கூறியுள்ளார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நன்கொடைகளை சேகரிப்பவர்களை ‘சந்தா ஜீவி’ தொழில்முறை நன்கொடை சேகரிப்பாளர்கள் என்று கூறி ராம பக்தர்களை கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிதி சேகரிப்பு துவங்கிய சில நாட்களில் ரூபாய் 1,500 கோடிக்கும் அதிகமாக பொதுமக்களால் அளிக்கப்பட்ட நன்கொடை, மக்கள் இதுபோன்ற அரசியல்வாதிகளை ஒருபொருட்டாக மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.