தவறான செய்தி பரப்பும் ஊடகங்கள்

மணி கண்ட்ரோல் எனப்படும் பிரபல நிதி சார்ந்த இணையம் ஒன்று, இரண்டு தினங்களுக்கு முன், பாரதம் 9,300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி குறித்து தவறான செய்திகளைப் பரப்பியதுடன் பாரதத்தில் ஆக்ஸிஜனின் பற்றாக்குறை நிலவுவதாக பொய்யான செய்தியை பரப்பியது. இதனை பல்வேறு ஊடகங்களும் ஊதி பெரிதாக்கின. தற்போது, தனது அடுத்த முயற்சியாக, ஒரு டோஸ் மருந்துக்கு ரூ. 150 நஷ்டம், ஆக்ஸ்போர்டுக்கு தரவேண்டிய 50 சதவீத ராயல்டி உள்ளிட்ட காரணங்களால் வேறு வழியின்றி சீரம் நிறுவனம் தனது தடுப்பூசிக்கான விலையை கூட்டியது. இதனையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனமும் தனது தயாரிப்பான கோவாக்சினுக்கு விலையை உயர்த்த விரும்புகிறது அதனால் இனி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒருவருக்கும் 1,000 ரூபாய் செலவாகும் என பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலாவை மேற்கோள் காட்டி மற்றொரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.