மாறும் மதரசா சட்டங்கள்

உத்தரபிரதேச அரசு விரைவில் மதரசாக்களின் சட்ட திட்டங்களை மாற்றவுள்ளது. உ.பியில் சுமார் 600 அரசு உதவி பெறும் மதரஸாக்கள் உள்ளன. அவை 9,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன. இதில் அனைத்து அதிகாரமும் மதரஸாவின் நிர்வாகக் குழுவிடமே இருக்கின்றது. படிப்பு காலத்தில் மாணவர்களுக்கு விடுமுறைகள் கிடையாது. இனி இவை அனைத்தும் மாறவுள்ளன. ஆட்சேர்ப்பு இனி பணியாளர் ஆணையத்தால் நடத்தப்படும். அரசு, மதரசாவின் நிர்வாகத்தை அவ்வப்போது கண்காணிக்கும். மாறிவரும் காலத்திற்கேற்ப, மதரஸா கல்விமுறை, மற்ற சமகாலப் பள்ளிகளைப் போல மாற்றம் பெரும். விளையாட்டு, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படும். மாணவர்களுக்கு விடுமுறைகள் வழங்கப்படும். இந்த புதிய கல்விமுறை, மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தையொட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது