மாட்டும் மல்லையா

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இந்திய வங்கிகளில், தொழிலதிபர்களான விஜய் மல்லையா ரூ. 9,500 கோடியும், வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், மெகுல் சோக்‌சி ரூ. 13,500 கோடியும் கடன் வாங்கி மோசடி செய்தனர். பா.ஜ.க ஆட்சியில் பிடிபடுவோம் என தெரிந்ததும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். அவர்களை நாடு கடத்தி வரும் நடவடிக்கைகளை சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் எடுத்துள்ளன. ஏற்கனவே முகுல் சோக்சி, நிரவ் மோடியை கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறும் நிலையை அடைந்துவிட்டன. தற்போது, நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால், சட்டத்தின் மூலம் காலம் தாழ்த்துவதற்கான அனைத்து கதவுகளும் மல்லையாவுக்கு மூடப்பட்டு விட்டது. இனி, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து சிறையில் அடைக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சிபிஐ.யும். அமலாக்கத் துறையும் தெரிவித்துள்ளன.