மது இல்லாத மாநிலம்

மத்திய பிரதேசத்தின் கத்னி எனும் பகுதியில் அரசுத் திட்டங்கள் துவக்க விழாவில் அம்மாநில முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பேசினார். அப்போது ‘மத்திய பிரதேசத்தில் மதுவை தடை செய்ய திட்டமிட்டுள்ளோம். மத்திய பிரதேசத்தை மது இல்லா மாநிலம் ஆக்க விரும்புகிறோம். மது விலக்கினால் மட்டுமே இது சாத்தியம் ஆகிவிடாது. மது குடிப்போர் இருக்கும் வரை மது விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே மது குடிப்பதால் ஏற்படும் தீங்கினை எடுத்துரைப்பதற்காக விழிப்புணர்வு பிரசாரத்தை விரைவில் துவக்க இருக்கிறோம். இதன் மூலம் மக்களை மது குடிப்பதில் இருந்து காத்து நல்ல மாநிலம் என்ற நிலையை எட்ட பாடுபடுவோம். பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றிருக்கிறது. இதுவரை 37 பேருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. இதில் 2 பேர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்’ என்று கூறினார்.