பிராமணர் நலவாரியம் வலியுறுத்தல்

தர்மபுரியில் நடந்த, பிராமணர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி பிராமணர் சங்க மாநில தலைவர் ஹரிஹரமுத்து ஐயர் நிருபர்களிடம் பேசினார். ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு, இந்த இட ஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்த வேண்டும். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள், பிராமணர்களுக்கு தனி நலவாரியம் அமைத்துள்ளது. அதேபோன்று, தமிழகத்திலும் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறையில் நியமிக்கப்பட்டுள்ள பிற மதத்தினரை, உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். கோயில் அறங்காவலர்களாக, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஹிந்துக்களையே நியமிக்க வேண்டும். கோயில்களில் தற்காலிக, பரம்பரை முறை அர்ச்சகர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு, பணி நலன் கருதி, வாரியம் அமைக்க வேண்டும்.  வரும் சட்டசபை தேர்தலில், பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம், கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறினார்.