கேரள மாணவர்கள் ராஜினாமா

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மலையாள மாணவர்கள் நடத்தும் ஒரு குழு ‘மைத்ரி. இந்த அமைப்பு முஸ்லிம் மாணவர் முன்னணி, மாணவர் இஸ்லாமிய அமைப்பு மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளிடம் விலை போய்விட்டதாக கூறி இந்த அமைப்பின் கேரள மன்றத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணெந்து உட்பட பலர் அந்த குழுவில் இருந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் இந்த அமைப்பு உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உ.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திக் கப்பனுக்கு ஆதரவாக இந்த மன்றம் சமீபத்தில் குரல் கொடுத்தது. சித்திக் கப்பன், ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இனவாத வன்முறையைத் தூண்டியதற்காக உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் சித்திக் கப்பனுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன்கூட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.