மோடியை பாராட்டிய கபில்தேவ்

பிரதமர் மோடியை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

பாரதத்தில் எந்தப் பிரதமரும் நம் நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க விரும்புவதாக எப்போதாவது கூறியிருக்கிறாரா, குழந்தைகளை விளையாட ஊக்குவிக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தாரா என்பது தெரியவில்லை. பிரதமர் மோடிதான் முதலில் இதைச் செய்தவராக இருப்பார்.

மக்கள் ஒரு விளையாட்டு வீரரின் வெற்றியைப் மட்டுமே கொண்டாடுகின்றனர். தோல்வியடைந்தவர் மறக்கப்படுவார். ஆனால், வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாமல் தனது போராட்டத்தில் அக்கறை கொண்ட ஒருவர் உள்ளார் என்பதுதான் ஒரு விளையாட்டு வீரரின் முக்கியத்தேவை. அவ்வகையில், பிரதமர் மோடியின் மரியாதை விளையாட்டு வீரர்கள் எடுக்கும் முயற்சிக்குதான், பதக்கங்களுக்கு அல்ல என்பது தெளிவாகிறது.

ஒருவர் வெற்றிபெறும்போது அவர்களை அழைத்து பேசுவார்கள். ஆனால் பிரதமரோ தோற்றபோதும் அவர்களை அழைத்துள்ளார். உதாரணமாக, வினேஷ் போகத், போட்டிகளில் தோற்றதால் அதிகமாக கோபப்பட்டார். ஆனால் மோடி, “வெற்றியை ஒருபோதும் உங்கள் தலையில் ஏறி அமர விடாதீர்கள், தோல்வியை உங்கள் இதயத்திற்கு செல்ல விடாதீர்கள்”. என்று ஆறுதல் கூறினார். இது அனைவருக்கும் பொருந்தும். இது ஒரு ஞானியின் ஆலோசனை.

ஒலிம்பிக் வீரர்கள் பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதறும்போது, ​​அவர்கள் சுய தண்டனையை அனுபவிக்கின்றனர். அந்த நேரத்தில், அவர்களுக்கு ஒரு ஆதரவான தோள் தேவை. தேசம் முழுவதும் அவர்களுக்கு துணை நிற்கிறது என்பதைக் காட்ட பிரதமரை விட சிறந்தவர் யார்?

பிரதமர், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் பெயர், அவரின் விளையாட்டு, குடும்பம், வாழ்க்கை, பிரச்சனைகள் என அனைத்தையும் நன்கு அறிந்திருந்தார். அதனை குறித்து அவர்களிடம் பேசினார்.

பொதுவாக, அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளின் உரைகள் மட்டுமே இருக்கும். அதில் விளையாட்டு வீரர்கள் ஒரு பொருட்டல்ல என்ற நுட்பமான செய்தி இருக்கும். ஆனால், இந்நிகழ்வின் போது, ​​பிரதமர் விளையாட்டுகள் மையமாக இருப்பதை உறுதிசெய்தார். வீர்ர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தி. மோடி உண்மையிலேயே விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்.

நான் ஒரு விளையாட்டு வீரனாக, சக வீரர்கள், பிரதமரிடமிருந்து அன்பையும் பாசத்தையும் பெறுவதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், மகிழ்ச்சியடைகிறேன்.

‘மோடி ஜி, நீங்கள் அனைத்து விளையாட்டு சகோதரர்களின் மனங்களை வென்றுவிட்டீர்கள்’