மூவர்ணத்தில் ஜின்னா கோபுரம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ‘ஜின்னா’ கோபுரம், பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் பெயரிடப்பட்ட ஒரு வகையான கட்டடம். இது ஜின்னா மையம் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த குடியரசு தினத்தன்று இங்கு தேசியக் கொடியை ஏற்ற முயன்ற ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆந்திரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனால் ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளுங்கட்சி கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதனையடுத்து, அந்த கோபுரத்திற்கு மூவர்ண வர்ணம் பூசப்பட்டு, அதன் அருகே தேசியக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசு செய்துல்ளது. இதுகுறித்து கிழக்கு குண்டூர் எம்.எல்.ஏ முகமது முஸ்தபா கூறுகையில், ‘பல்வேறு குழுக்களின் கோரிக்கையை ஏற்று, கோபுரத்தை மூவர்ணக் கொடியால் அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டது. தேசியக் கொடி ஏற்றத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்திர மாநில பா.ஜ.க, ‘இது போலி மதச்சார்பற்ற மற்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரான பா.ஜ.க மற்றும் தேசியவாத அமைப்புகளின் வெற்றி.  எனினும் இதில் ஜின்னாவின் பெயரை அகற்றும்வரை பா.ஜ.கவும் தேசியவாத சக்திகள் ஓயாது. இதற்கு டாக்டர் அப்துல் கலாம் அல்லது ஸ்ரீ குர்ராம் ஜாஷுவாவின் பெயரை இடலாம்’ என தெரிவித்துள்ளது.