தீட்சிதர் குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மை

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைகள் திருமணம் நடந்ததாக புகார் வந்ததாகக்கூறி அடிப்படையில், குழந்தைகளின் பெற்றோர் நள்ளிர்வில் கைது, பெண்களை காவல் நிலைய விதிமுறைகளை மீறி விசாரணை செய்தது, சம்பந்தப்பட்ட சிறுமியரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, ‘இரு விரல்பரிசோதனை’ எனப்படும் கன்னித்தன்மை பரிசோதனை செய்தது உள்ளிட்ட பல விதி மீறல்களின் தமிழக அரசின் காவல்துறை ஈடுபட்டது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தியிருந்தார். இது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழு சிதம்பரத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை நகலை, ஆணைய உறுப்பினர் ஆனந்த் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ஒப்படைத்தார். 132 பக்க அறிக்கை நகலுடன், இது குறித்த இரண்டு ‘பென் டிரைவ்’கள், சில புகைப்படங்களும் வழங்கப்பட்டன. மேலும், அந்த அறிக்கையில், தீட்சிதர் குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மை என தங்களது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.