சிலை செய்ததில் முறைகேடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்ததையடுத்து, ஸ்தபதி முத்தையா மூலம் மற்றொரு தங்க சிலை செய்ய முடிவு செய்யப்பட்டடு சிலை வடிவமைக்கப்பட்டது. இதற்காக 100 கிலோ தங்கம் சேகரிக்கப்பட்டது. இந்த புதிய சிலையில் தங்கம் அறவே இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரை அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் காடந்த 2019ல் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அன்றைய ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணி பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஸ்தபதி முத்தையா உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவின் மீதான விசாரணையின்போது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிலை வடிவமைப்பில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. எனவே, வழக்கை ரத்து செய்யக்கூடாது’ என வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 12க்கு தள்ளிவைக்கப்பட்டது.