மாற்று எரிபொருள் வாகன அறிமுகம்

மராட்டிய மாநிலம் புனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, ‘அடுத்த 3, 4 மாதங்களில் பி.எம்.டபிள்யு., மெர்சிடஸ் முதல் டாடா வரையிலான அனைத்து கார் உற்பத்தியாளர்களும் நெகிழ்வு தன்மை கொண்ட ‘பிளக்ஸ்’ என்ஜின் வாகனங்களை (பெட்ரோல், மெத்தனால், எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வாகனம்) அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் பிறப்பிக்க போகிறேன். அடுத்து இதேபோல பஜாஜ், டி.வி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் பிளக்ஸ் என்ஜின் வாகனங்களை அறிமுகம் செய்யுமாறு கூறியுள்ளேன். அதை செய்து முடிக்கும் வரை என்னிடம் வரவேண்டாம் எனவும் அவர்களிடம் கூறியுள்ளேன். நமது நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற வாழ்நாள் ஆசை எனக்கு உண்டு. அதற்கு பதிலாக எத்தனால் எரிபொருளை நமது விவசாயிகளால் உள்ளூரிலேயே தர முடியும்’ என கூறினார்.