கோயில் நகைகள் உருக்க எதிர்ப்பு

தமிழக பா.ஜ.கவின் முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில்களில் உள்ள இறைவனுக்கு வேண்டுதல் அடிப்படையில், மாமன்னர்கள் முதல் சாதாரண குடிமக்கள்வரை, அவரவர் விருப்பம், கலாசாரப்படி வழங்கிய நகைகளை தமிழக அரசு உருக்க முடிவு எடுத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. மிகப் பெரிய அநீதியும், வரலாற்று கொடுமையும் தமிழக கோயில்களுக்கு நடக்கின்றன. நினைத்து பார்க்க முடியாத கொடூரம், மிகப் பெரிய வஞ்சனை இது. ஆப்கானிய தலிபான்களின் பாமியான் சிலை தகர்ப்புக்கும், திராவிட தலிபான்களின் நகை ஒழிப்புக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. ஹிந்து சமய கோயில்களின் இருப்பிடமாக கருதப்படும் மாநிலம் நம் தமிழகம். தற்போதைய ஆட்சியின் தலைமை, மதச்சார்பற்ற அரசு என்ற முகமூடியை போட்டுக் கொண்டு ஹிந்து மத கலாசார பண்பாட்டுச் சின்னங்களான கோயில்களின் நகைகளை உருக்க முற்படுவதை கைவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.