இணைய பாதுகாப்பு

இணையத்திலே வங்கி, கிரெடிட் டெபிட் கார்டு தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:
“http” “https” என்னும் வார்த்தைகளை வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா, இந்த இரண்டுக்கும் பெருமளவு வித்தியாசம் உண்டு. நம்முடைய தகவல்களின் பாதுகாப்புக்காக அறியவேண்டிய தகவல் இது; இதை அறியாமல் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் பறிபோயுள்ளன. இதன் வித்தியாசம் என்னவெனத் தெரிந்து கொள்வோம்.

நம்முடைய தகவல்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் https எனும் தகவல் பரிமாற்ற நிரலி. முன்பு இருந்த http என்பது Hyper Text Transfer Protocol என்பதைக் குறிக்கும். இதில் அனுப்பப்படும் தகவல்களை எளிதாக பார்க்கமுடியும். ‘s’ என்பது இணைந்தால், ‘Secure’ என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் முதல் வார்த்தை “http://” என வரும். இதன் பொருள், தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே. இது தங்கள் கணினியின் மொழிகளை தாங்கள் உள்நுழைந்த இந்த இணைய முகவரிமூலம் ஒட்டுக்கேட்கவும் வகைசெய்யும்.

இப்படிப்பட்ட இணைய முகவரியில் தாங்கள் நுழைந்து பூர்த்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாகப் பார்க்க முடியும். எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ இந்த http:// என தொடங்கும் இணைய முகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.! அதேசமயம், தங்கள் இணைய முகவரி https:// என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணைய முகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள். இதிலிருந்து நமது தகவல்களை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது. இந்த S என்னும் ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணைய முகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தற்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்! இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் எனில், முதலில் இந்த வித்தியாசத்தைக் கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய தளம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும். (உதாரணமாக: .com or .org, .co.in, .net etc).* இவற்றின்முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர். .Eg: http://amazon.diwali -festivals.com என எடுத்துக் கொள்வோம். இதில் .com என்பதற்கு முன்னால் உள்ள diwali-festivals (amazon என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையதளத்தின் முகவரி. எனவே இது amazon.com இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது diwali-festivals.com எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய தளத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுகளையும் கண்டறிய முடியும். தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியதுபோல், .com எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா என முதலில் கவனியுங்கள். Eg: icicibank.com என்பது icici வங்கியைச் சார்ந்தது; ஆனால், icicibank. வேறு ஏதோ வார்த்தை .com என வந்தால், அது icici வங்கியுடையது அல்ல. அந்த‌ _வேறு ஏதோ வார்த்தையுடையது. இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும். ஆனால், இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்.