பாரதத்தில் யுரேனியம்

பாரதத்தில் பல மாநிலங்களில் யுரேனியம் இருப்பு குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் தற்போது மிகப்பெரிய யுரேனியம், தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோ-சீனா எல்லையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரத எல்லை கிராமமான மெச்சுவா பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அங்குள்ள மலைகளில் யுரேனியம் மற்றும் தங்க இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனா கைப்பற்ற நினைப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 619 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த யுரேனியம், சந்தையில் U 3O8 என விற்கப்படுகிறது. உலகின் 70 சதவீத யுரேனியம் கஜகஸ்தான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.