பாரதத்தின் முதல் சமூக வலைத்தளம்

பாரதத்தின் முதல் சமூக வலைத்தளமான ‘பாரதம்’ தற்போது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இது முழுக்க முழுக்க பாரதத்தில் ஆத்ம நிர்பர், வோக்கல் பார் லோக்கல், மேக் இன் இந்தியா திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. இதில் மக்கள் பாதுகாப்பாக அரட்டையடிப்பது, தங்கள் அரிய தருணங்களை பகிர்ந்து கொள்வது, வீடியோக்களை ஷேர் செய்தல், விளையாட்டு, நேரலை உரையாடல், இணைய சந்தையில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்ய முடியும். இது வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.’ என கூறியுள்ளார் இதன் நிறுவனர் நீரஜ் சிங் பிஷ்ட்.  மேலும், ‘நம் நாட்டின் தரவுகளை நம் நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டு இந்த சமூக வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது.. இது இந்தியர்களால் மட்டுமே  முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது. மக்கள் இப்போது தனியுரிமை மற்றும் பாதுகாப்போடு ஒரே மேடையில் பல்வேறு அம்சங்களை அனுபவிக்க முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.