உலக வங்கியை சாடிய பாரதம்

முதல் முறையாக 1960ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் திட்டத்தை பாகிஸ்தானுக்கு பாரதம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பாரதம் எப்போதுமே உறுதியான ஆதரவாளராகவும், பொறுப்பான பங்காளியாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தானின் செயல்பாடுகள், ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் காரனமாக இந்த அறிவிப்பை வெளியிடும் கட்டாயத்துக்கு பாரதம் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இரு நாடுகளுக்கும்இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க நடுவர் நீதிமன்றத்தையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க உலக வங்கி முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “அவர்கள் (உலக வங்கி) எங்களுக்கான ஒப்பந்தத்தை விளக்கும் நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம். எங்கள் மதிப்பீட்டின்படி இந்த ஒப்பந்தத்தை தரப்படுத்த தேவையான அணுகுமுறைகளுக்கான ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நடந்துகொண்டிருக்கும் மீறல்களை சரிசெய்வதற்காக இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதற்கான பாகிஸ்தானின் பதிலைப் பற்றியோ அல்லதுஉலக வங்கியின் எந்தப் பதில் குறித்தோ எனக்குத் தெரியாது. உலக வங்கியே, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு இணையான செயல்முறைகளைக் கொண்டிருப்பதில் உள்ள சிக்கலை ஒப்புக்கொண்டது. எங்கள் விளக்கம் மற்றும் மதிப்பீடு இது ஒப்பந்தத்தின் விதிகளுடன் ஒத்துப்போவதில்லை, எனவே நாங்கள் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பற்றி பேசுகிறோம். இந்த விஷயத்தில் பாரதத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா என்று தெரியவில்லை” என கூறினார்.