ஹிந்துக்களின் அடையாளம்

மஹாராஷ்ராவின் நாக்பூரில் வி.ஹெச்.பி. மூத்த தலைவர் ரவீந்திர நரேன் சிங், ‘ஹிந்துத்துவ கொள்கைகளையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஹிந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக இணைய வேண்டும். ‘நமக்கு எதுவும் நடக்காது’ என ஹிந்துக்கள் நினைக்கின்றனர். இந்த மனநிலையால்தன் நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். நாட்டுக்கு சேவையாற்றுவதில் ஹிந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் பணியாற்ற முன்வர வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் சிட்டியும் முஸ்லிம்களுக்கு மெக்காவையும் போல ஹிந்துத்துவ அடையாளமாக ஸ்ரீராம ஜென்மபூமி உருவாக்கப்படும். பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் நடத்தி மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர். மத மாற்றத்துக்கான வெளிநாட்டு நிதிகள் பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை விதித்துள்ள பிரதமர் மோடியின் செயல் பாராட்டுக்குரியது’ என்று கூறினார்.